செவ்வாய், 21 மார்ச், 2023

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?


1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூடிங் பேமிலி மெம்பர்ஸ் கிட்டயும் திட்டு விழும்

 But future family a save பண்றதும் family a run பண்றதுக்கும் NWM தான் உதவி செய்யும் 

conditions apply:- தப்பான company a choose பண்ணா ஜெயிக்க முடியாது


2. நம்ம நாட்டுல தான் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கண்டுக்கவே இல்ல மத்த நாட்டுல எல்லாம் 70% மக்கள் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான் பண்ணிட்டு இருக்காங்க


3. இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் நாட்டோட support இல்லாமலே வளருது


4. உலகத்திலேயே நம்பர் ஒன் விலை உயர்ந்த கார ( Luxury cars) வாங்குறது வேற யாரும் இல்ல நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்றவங்க தான். இதுல மட்டும் தான் net income cut பண்ணிட்டு மக்களுக்கு பணம் கொடுக்குறாங்க.


5. எப்போ கவர்மெண்ட் நெட்வொர்க் மார்க்கெட்டிங் சப்போர்ட் பண்ணதும் அப்போ இந்த நெட்வொர்க் மார்க்கெட்டிங் இந்த நாடு நாட்டில் இருக்கிற வேலை இல்லாத மக்களை காப்பாற்றும் நிறைய வேலை வாய்ப்பு உருவாக்கி தரும்.


Example:- 1. ஊர்ல வேலை இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க

2. விவசாயத்தோட அழிவு புதுப்புது கருவிகள் வந்ததுனால இப்ப கொஞ்ச பேர் தான் விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க

3. பேங்க்ல நடக்குற விஷயம் இப்போ பணம் போடுறதுக்கும் எடுக்குறதுக்கும் நம்ம ATM machine மூலமாக தான் யூஸ் பண்ணிட்டு இருக்கோம்.


6. 2025 -2028 ல 20 -25 கோடி மக்களுக்கு மட்டும்தான் வேலை வாய்ப்பு இருக்கும் மொத்தம் 131 கோடி மக்கள் தொகையில்.

Example:- 1. Automobile company (about muthukrishnan)

2. கவர்மெண்ட்ல வேலை பாக்குறவங்க கவர்மெண்ட் பஸ் ஓட்டுறாங்க எனக்கு என்ன அப்படின்னு சொல்லிட்டு வேலை பாப்பாங்க அவங்களுக்கு மக்கள் மேல அக்கறையே கிடையாது


7. நான் வேலை செய்றேன் பணம் கொடு என்று சொல்கிறாய், தில்லு தெனாவெட்டு நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்றவங்களுக்கு மட்டும் தான் இருக்கு, வருங்காலத்தை காப்பாற்றுவதை நெட்வொர்க் மார்க்கெட்டிங் தான்.


8. ஏன்னா மத்த கம்பெனி நூறுல இருந்து ஆயிரம் மக்களுக்கு தான் வேலை வாய்ப்பு உருவாக்கி தர முடியும் ஆனால் நெட்வொர்க் மார்க்கெட்டிங் ல லட்ச லட்சமான மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர முடியும்.


9. மத்த நாட்டுல எல்லாம் மக்களை educate பண்றாங்க ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இலவசமா எல்லாத்தையுமே கொடுத்து மக்களை கெடுத்து வைக்கிறாங்க.


10. மீனைப் பிடிக்க கற்றுக்கொடுத்தா அவன் என்னைக்குனாலும் பொழைச்சுக்குவான் மீன் பிடிச்சு கைல கொடுத்தா அப்போ பசிக்கு மட்டும் தான் அதை சாப்பிடுவாங்க..


11. நம்மகிட்ட எப்போதுமே 7 types of income இருந்துகிட்டே இருக்கணும் அதுல நெட்வொர்க் மார்க்கெட்டிங் ஒரு income இருக்கணும். பெரிய பெரிய Billinaries , millinaries ku சொல்லிக் கொடுத்த teachers எல்லாமே இதை தான் அவங்களுக்கு சொல்லி கொடுத்தாங்க..


Robert casacade, tony ramasden ( pls verify the names sir) இவங்க என்ன சொல்லி இருக்காங்கன்னா தினமும் 15 நிமிஷம் நம்ம நெட்வொர்க் மார்க்கெட்டிங்கு செலவு பண்ணினா நம்மளோட வாழ்க்கையவே அப்படியே totalla 360* மாத்தி தரும் அப்படின்னு சொல்லி இருக்காங்க..


 The choice is yours ☺️

செவ்வாய், 7 மார்ச், 2023

ஏன் மக்கள் நம்ம வெறுக்கிறாங்க?

 ஏன் மக்கள் நம்ம வெறுக்கிறாங்க?


💥மக்கள் கூட உறவு நீடிக்கும்னா இந்த ஏழு விஷயங்கள் பண்ணக்கூடாது. 💥


🌺 என்ன அதுன்னு பார்க்கலாமா?🌺


1. பேசிட்டு இருக்கும் போது நீங்க தான் correct.

எதிர்த்தால உள்ளவங்க தப்பு , என்கிற விஷயத்தை எப்பொழுதும் proof பண்ணாதீங்க.

May be அவங்க சரியாக இருக்கலாம், இல்லை தப்பாக இருக்கலாம்.

நீங்க வந்து correct ஆ இருக்கலாம் .எப்படினாலும் இருக்கலாம்.

ஆனா அவங்க தான் தப்பு என்று proof பண்ணாதீங்க.

நான் தான் சரி, நீ தான் தப்பு என்கிறதை மக்கள் நிறைய நேரம் proof பண்ணுவதில் குறியாக இருப்பாங்க.

நீங்க சரின்னு proof பண்ணிருவீங்க. ஆனால் அந்த உறவை இழந்திடுவோம்.

உங்களுக்கு தப்புன்னு தோணுச்சு அப்படினா, இது எப்படி சரின்னு நினைக்கிறீங்க. எனக்கு இப்படிதான் நிறைய விஷயம் தெரியுது, அப்படின்னு கேட்கணும்.

நிறைய பேரு என்ன பண்ணுவாங்க, எல்லாரும் நான் தப்பு, நான் சரி என சொல்வதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

நான் என்கிற அகங்காரம், எனக்கு தெரியும் என்கிற அகங்காரம், இந்த அகங்காரம் பேசும் போது தெரிஞ்சிடும்.

அதற்கு என்ன செய்யலாம், special ஆ வந்துட்டு நீங்க, எனக்கு இப்படி தெரியும், நான் இதை சொல்லி இருக்கேன், நான் இப்படித்தான் நினைக்கிறேன், நான் இதைத்தான் நம்புகிறேன், நான் இப்படித்தான் உலகத்தை பார்க்கிறேன். இதில் இந்த நான் நான் என்பது அப்படின்னு இருக்கும். 'நான் நான்' என்று இருந்தால் நீங்க மற்றவர்களை சாகடிக்கீறேங்கனு அர்த்தம். அதுக்கு பதில் நான் இந்த மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேன், அது சரியா அப்படின்னு ஒரு doubt மாதிரி கேட்கலாம், அல்லது சத்தம் காட்டாமல் அவங்க சொல்லுவதற்கு தலையை ஆட்டிட்டு வெளியே வந்திரலாம். அவங்களை சிருமைப் படுத்திறதோ, கேவலப்படுத்திறதோ, தப்புன்னு சொல்றதோ , சொன்னா நம்ம அந்த உறவை இழந்திடுவோம். நீ சரின்னு சொல்லலாம் ஆனா உலகம் முழுவதும் நீ தனியாக சுத்திகிட்டுத்தான் இருக்கணும் .




2.அது மாதிரி நம்ம யார் கூடவோ பேசிகிட்டு இருக்கிறோம். திடீர்னு வந்து வேறொருத்தர் important - னாகத் தெரியும். முக்கியமான ஆளாக இருப்பாங்க. திடீர்னு வந்து இவங்களை சரி சரி நீங்க போங்க என்று சொல்லிட்டு, அவங்களை வாங்க அவங்க தான் முக்கியமான ஆளுன்னு பேச்சு காலிலும் சரி, பழக்க வழக்கங்களிலும் சரி, எங்கேயும் அந்த importants வந்து காட்டக்கூடாது. யார்கிட்ட நீங்க பேசிகிட்டு இருக்கீங்களோ அவங்க தான் முக்கியம் . அவங்க கிட்ட தான் நீங்க முக்கியமா பேசனும். அந்த நேரத்தில் அவங்களை insult பண்ணி மற்றவர்களிடம் உங்க முக்கியத்துவத்தை காட்டக் கூடாது‌.

 இப்ப பார்த்தீங்கனா எனக்கு friends படம் ஞாபகத்திற்கு வருது. அதில் விஜய் வந்து ஒரு பொண்ணு கூட பேசிகிட்டு இருப்பாரு .அதாவது ஒரு பொண்ணை சைட் அடிச்சிட்டு இருப்பாரு .அந்த பெண்ணைப் பார்ப்பது, பேசுவது அப்படின்னு இருப்பார்.தீடீர்னு என்ன பண்ணுவார்னா ,Heroine தேவ்யானி வந்தவுடன் , அந்த பொண்ணை பார்ப்பதை, சிரிப்பதை டக்குனு விட்டுட்டு, தேவ்யானி பின்னால் போயிடுவாரு விஜய். அதற்கு அப்புறம் அந்தப் படம் நடக்குவதற்கு காரணம் வந்து அந்தப் பெண்ணாகத்தான் இருக்கும். Full game plan பண்ணி விஜயை நாஸ்தி பண்ணி விட்டுருவாங்க அந்த படத்தில.

இது எதுக்கு நடக்கும் அப்படினா

  நீ ஒருத்தருக்கு important கொடுத்துக்கிட்டு இருக்கும் போது திடீர்னு அவங்களை விட்டுட்டு மற்றவங்களுக்கு important கொடுத்தேங்கனா அவங்களுக்கு உங்க மேல கோபம் வரும். உங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவாங்க. வாழ்க்கை முடிஞ்சிட்டு, இல்லேன்னா அந்த friendship யை இழந்திடுவோம்.


3. மனுஷனை விட வந்து technology ரொம்ப நம்புவாங்க.நம்மளை சுத்தி 

நம்ம family-ல ,வீட்டில, அம்மா அப்பா கூட, ஃபிரண்ட்ஸ் கூட, யார் கூட நாம் இருக்கும்போதும், அவங்களுக்கு தான் முதலில் முக்கியத்துவம் கொடுக்கணும். எப்பவும் phone -யை பார்த்துகிட்டு,computer , இல்ல வேலை, நான் அங்க இருக்க போறேன், இங்க இருக்க போறேன் அப்படின்னு சொல்லிட்டு வேற பொருட்கள் மேலேயும், மனுஷங்க கூட இருந்தாங்கன்னா , மனுஷங்ககூட பேசுங்க.நம்ம மற்றது மேல important கொடுத்தோம்னா உறவுகள் முறிஞ்சிடும். அவன் எப்போதும் phone-யையே பார்த்துட்டு இருப்பான். ஒருத்தர் வந்திருக்காங்கன்னா டிவியை பார்த்துட்டு இருப்பது, நியூஸ் பார்த்துகிட்டு இருப்பது, என்னத்தையாவது பார்த்துக்கிட்டு இருப்பது,

மனுஷங்களுக்கு important கொடுப்பதில்லை என்றால் நம்ம Friendship -யை, உறவை இழந்திடுவோம்.

உறவை இழப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் ,நமக்கு மதிப்பு மரியாதை இருக்காது ‌.அப்புறம் வந்து எனக்கு ஒரு friends-ம் கிடையாது ,ஒருத்தரும் கிடையாது அப்படினா,

அப்படி நீ வளர்ந்திருக்க, அதனால் தான் ஒருத்தர் கூட உன்னைய மதிக்கல. அடுத்தவங்க நம்மளை எப்படி மதிக்கிறாங்கன்னா, நம்ம நடந்துக்கிற விதத்தில் தான் அவங்க நம்மளை மதிப்பாங்க.


4 . Communication இருக்கலாம். நம்ம மதிப்பு மரியாதை இல்லாம போகலாம்.

 முழுக்க முழுக்க மக்கள் வந்து ஒரு negative நடந்துருச்சுன்னா அதைப்பற்றியே நிறைய பேசுவாங்க‌. மோசமான விஷயத்தைப் பற்றி பேசுவாங்க. மோசமான விஷயத்தை நிறைய பேசுவாங்க. அவங்க பேசுவது எல்லாம் மோசமான விஷயமாக இருக்கும், Negative விஷயமாக இருக்கும். ஒருத்தங்க இறந்து போயிட்டாங்கனா அதைப்பற்றியே பேசுவது, ஒரு இடத்தில் accident நடந்துச்சுன்னா அதைப்பற்றியே பேசுவது, எனக்கு தெரிஞ்சவங்க, அவங்க வீட்டில் பேசிக்கிட்டே இருக்கும் போது, அங்கே போகாதீங்க, அங்கே போனா danger, பார்த்துப் போங்க, ஏற்கனவே ஒருத்தர் வந்து போய் accident ஆகி.

3 நாட்கள் ஆகியும் காணவே இல்லையாம்.என்னன்னு பார்க்கும்போது அவங்க மூக்கில் புழு வந்துச்சாம் அப்புறம் வந்து பார்த்தீங்கன்னா எல்லாரும் போய்ட்டாங்களாம். நீங்க கவனமாக போங்க அப்படின்னு.

 ‌ஒரு இடத்துக்கு போகும்போதே இப்படி ஆகிபோச்சு, அப்படி ஆகிபோச்சு, கவனமாக நீங்க போங்க என சொல்லும்போது, negativity நிறைய பேசும்போதும், மற்றவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிரும். நமக்கு தெரியும் அவங்க பாவம் innocent, அவங்களுக்கு வந்து வயதாகி விட்டதால் இந்த மாதிரி விஷயங்கள் தெரியாமல் பேசலாம். நமக்குத் தெரியும், ஆனா மத்தவங்க வந்து அதை தப்பா நினைச்சிருவாங்க. இவங்களை விட்டு தூர இருப்பாங்க. அவங்களை அறியாமலேயே ஒரு பயம் வந்திடும். அவங்க கிட்ட பேச மாட்டாங்க.அங்களுக்கு தெரியாமலே வரும் , தெரிஞ்சும் பண்ணுறவாங்க இருப்பாங்க.

Negativity - யை பத்தியும், தப்புகளை பத்தியும், அடுத்தவங்களை குறை சொல்லுவதை பத்தியும், அவங்க பின்னாடி புரளி பேசுவது எல்லாம் நிறைய பண்ணுவாங்க .இதையே பொழப்பா பண்ணுவாங்க.

இவங்க கிட்ட மக்கள் நிற்கமாட்டாங்க. அப்படிப்பட்ட ஆளா நீங்க? செக் பண்ணிக்கோங்க. அது மாதிரி ஒரு சங்கடம் இல்லாத மாதிரி.


5. ஒரு topic நம்ம பேசிகிட்டு இருக்கோம். நம்ம வந்து குழந்தைகளை எப்படி வளர்க்கிறது? அந்த மாதிரி விஷயங்கள். குழந்தைகள் என்ன சேட்டை பண்ணும். குழந்தைகள் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பேசிக் கொண்டே இருக்கும் போது ,திடீர்னு வந்து எங்கேயாவது ஒரு விஷயத்தை பற்றி பேசுவது, எங்க ஊர்ல மாடு வந்து எவ்வளவு பால் கறக்கும் தெரியுமா? அது வந்து எருமை மாடு நல்லதா? பசு மாடு நல்லதா ? காங்கேயத்தில் வந்து காளை மாடுக்களுக்காக ,நம் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினர் தெரியுமா? சம்பந்தமே இல்லாமல் ஒரு topic -யை உள்ளுக்கு இழுத்து விட்டுருவான்.

அவன் mind -ல அது ஓடும், உடனே உள்ளுக்கு இழுத்து விட்டுருவான் .

ஒருத்தர் கிட்ட பேசும் போது அவங்க எந்த theme - ல , எந்த topic ல பேசிகிட்டு இருக்காங்களோ ,அதையே நீங்க கேட்டுகிட்டு இருக்கணும். வேற எங்கேயும் திகைத்துப் போக கூடாது.

Consulting call -ல வந்து நான் just introduce ஆனவுடன் உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா சொல்லுங்க அப்படின்னு சொல்லுவேன். Sometime உங்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாமா? அப்படின்னு சொன்னா,அது ஒரு மணி நேரம் போகும். ஒரு மணி நேரம் அவங்க பேசிக்கிட்டே இருப்பாங்க. நான் ஒரு மணி நேரம் கேட்டுக்கிட்டே இருப்பேன் .ஏனா அவங்களை பற்றி நிறைய தெரிஞ்சாதான் அவங்களுக்கு நான் coaching கொடுக்க முடியும். அவங்களுக்கு sales பண்ண முடியுமா? இல்லையா? இவங்க என்ன மாதிரியான type ,இவங்க வாழ்க்கை background என்ன? இவங்களுக்கும் நமக்கும் set ஆகுமா? இவங்க fake ஆ acting பண்ணக்கூடிய ஆளா?

Real ஆ இருக்கிற ஆளா?

பயம் ஒன்று இவங்களுக்கு இருக்கா? மற்றவர்களை பற்றி complaint சொல்ல கூடிய ஆளா? இவங்க என் training சரி கிடையாதுன்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அந்த விஷயங்களை கண்டுபிடிக்க அவங்க கிட்ட நிறைய பேசும்போது தான், நம்ம அவங்களைப் பற்றி தெரிஞ்சுக்க முடியும். அடுத்தவங்களை பேச விட்டு கவனிச்சிட்டு இருங்க. சம்பந்தமே இல்லாத topic -யை உள்ளே இழுத்து விடுவது. அந்த topic அங்க தேவையே கிடையாது, இருந்தாலும் அங்கே இழுத்து விடுவது.அது அங்கே எல்லாருக்கும் சங்கடமாக இருக்கும். இங்கீதம் இல்லாதவங்களாக இருப்பாங்க. இந்த மாதிரியான மக்களைப் பார்க்கும் போது பாவம் இவங்க husband , பாவம் இவங்க wife , அப்படின்னு ஒரு feel வரும்.ஏனா

ஒரு சுமுகமான ,ஒரு அழகான, smooth ஆ ஒரு theme போயிட்டு இருக்கும்.

என்னவளே அடி என்னவளே என்று ஒரு மெல்லிய பாட்டு போய்கிட்டு இருக்கும்போது, திடீர்னு அப்படி போடு போடு என்று ஒரு குத்து பாட்டு போட்டா, என்னடா இவன் எங்கிருந்து சம்பந்தமே இல்லாம ஒரு theme - யை ..... நம்ம பேசிட்டு இருக்கும்போது சம்பந்தமே இல்லாத ஒன்றை

இறக்கி விடுவாங்க உள்ளே. உங்களை விட்டு ஒரு கூட்டம் ஓடிரும் .

அப்படிப்பட்ட ஒரு ஆளாக இருக்காதீங்க. இதில் என்ன பெரிய ஒரு பாவம் அப்படின்னா , இப்படி இருக்கிறாங்க என்று அவங்களுக்கே தெரியாது. நம்ம இப்படித்தான் இருக்கோம் என்று நமக்கே தெரியாது. நம்ம இப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்றதுக்கு உண்மையான நண்பர்கள் இருக்க மாட்டாங்க. இதைக்கேட்டு தூரம் போயிடுவாங்க. நம்ம கிட்ட வந்து எவனும் அதை மாத்திக்கோ என்று சொல்ல மாட்டாங்க. அப்படி ஒரு உண்மையான நண்பர்களை வச்சிருக்க மாட்டாங்க. இதெல்லாம் படிக்கணும் ,அதுக்கு எல்லாம் mentor இருக்காங்க,அதுக்கு படிப்பு இருக்கு, அதுவும் அவங்களுக்கு தெரியாது .ஏனா அவங்க சரண் அடைய மாட்டாங்க. நான் தாண்டா கொம்பு, எனக்கு ரெண்டு கொம்பு இருக்குது .அப்படின்னு வச்சுக்கிட்டு அலைவாங்க. இது பாவப்பட்ட ஜென்மம்.இது finished. செத்துப்போன பிறகு உள்ளே போட்டு புதைக்க வேண்டியதுதான். இது இப்பமே செத்துப் போயிட்டு, செத்துப் போனது உலகத்தில் அலைந்து கொண்டு இருக்குது,அந்த list -ல வந்திடுவாங்க. அந்த மாதிரி இருக்காதீங்க நடக்காதீங்க.


6. Topic change பண்ணுவது ஒருபக்கம். ஆனா இன்னொன்னு பண்ணுவாங்க. பேசிட்டு இருக்கும்போது stop. இது சொல்லுங்க, அது சொல்லுங்க. சரி okay.அப்படினு சொல்லிட்டு, பேசிக்கிட்டே இருக்கும்போதே, உள்ள வந்து stop பண்ணி விட்ருவாங்க.நான் இப்போது recent ஒரு training attend பண்ணினேன் .அந்த training -ல் எங்க mentor வந்து நீங்கள் எல்லோரும் ஒருத்தர் ஒருத்தரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொன்னாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஏழு, ஏழு நிமிஷம் நீங்க எல்லோரும் கதை சொல்லுங்க . ஒவ்வொருத்தரும் உங்க உங்க கதையை சொல்லுங்க‌ அப்படின்னு சொன்னாங்க.நானும் என் கதையை சொல்ல ஆரம்பித்தேன். நான் ரொம்ப அழகும், ரொம்ப hi fi -யும் coat shoot -ம் போட்டு இருக்காங்கனு மூஞ்ச பார்த்து நம்பிராதீங்க. உள்ள கூமுட்டைகளாக இருக்கும். அப்படின்னு நான் சொல்லுவேன் தெரியுமா? அந்த மாதிரி North Indian பொண்ணுங்க ,டெல்லி...... எல்லாம் beauty parlour தான் இருப்பாங்க நினைக்கிறேன்.பகல் முழுவதும் ஒரு நாள் முழுவதும் அங்க தான் இருப்பாங்க நினைக்கிறேன். அந்த மாதிரி makeup, அந்த மாதிரி dress , கம்பீரமாக அட்டகாசமாக, பார்த்தா தேவதை மாதிரி ,அவங்க கூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு ,எல்லாரும் share பண்ணுங்க, அப்படின்னா நீங்க share பண்ணுங்க ,உடனே 

 நான் share பண்ண ஆரம்பிச்சேன். நான் பேசி ஒரு நிமிஷம் 2 நிமிஷம் ஆயிருக்கும் நினைக்கிறேன். பார்த்துக்கோ நமக்கு time இல்ல 7 நிமிஷத்துல முடிக்கணும் . நான் பேசி இரண்டு நிமிஷம் தான் இருக்கும், அதுக்குள்ள முடிக்கணும் மத்தவங்களும் பேசணும் என்ன அப்படின்னான். நான் okay இது இது இப்படி அப்படின்னு முடிச்சிட்டேன். இல்ல நீங்க full ஆ சொல்லுங்க. அவ்வளவுதான் .நான் சொல்ல வேண்டியது வேற இல்ல. ஒருத்தன் flow - ல பேசிகிட்டு இருக்கான் அப்படின்னா அதை நிப்பாட்ட தெரியுது. கண்டிப்பா நமக்கு வேற வேலை இருக்கும் நிப்பாட்டனும் ,ஆனா அதுக்கு புத்தி வேணும்.அந்த Communication skills வேனும். அடுத்தவங்களை Hurt பண்ணாமல் அடுத்தவங்களை பாதிக்காமல் நமக்கு சொல்லத் தெரியணும். நிப்பாட்டனும் கண்டிப்பா வேற topic நம்ம பேசணும். ஆனா எல்லாத்துக்கும் பக்குவம் வேண்டும் ‌, பழகணும், பேசணும் அந்தமாதிரியான கூட்டத்தில் இருக்கணும்.அப்படி அந்த இடத்தில, இது ஒரு தருதல, இது ஒரு லூசு, ஐயையோ இது கிட்ட வந்து உட்கார்ந்திட்டோமே என்று அமைதியாக இருந்தேன். இன்னொருத்தர் பேசினாங்க. அப்புறம் அவங்க பேச ஆரம்பிச்சாங்க. பேசுறாங்க பேசுறாங்க பேசிகிட்டே இருக்காங்க. அங்க சாப்பிட்டேன், இங்க சாப்பிட்டேன், கை கழுவுனேன், தூங்கினேன் அந்த ஊருக்கு போனனேன்,இந்த ஊருக்கு போனேன் இதா ஒரு கதை. ஆனா நான் கேட்டுக்கிட்டே இருந்தேன். நான் ரொம்ப bore அடிக்கிறேன்னா. இல்ல இல்ல நீங்க ரொம்ப interesting ஆ பேசுறீங்க. நீங்க பேசுங்க ‌. அழகா இருக்கிறாங்க ,smart ஆ இருக்கிறாங்க, தேவதை மாதிரி இருக்காங்க, அப்படின்னா அவங்க சரியான கூமுட்டைகளாக இருப்பாங்க. இல்ல ஒரு விவரமும் தெரியாதவங்களாக இருப்பாங்க. அப்படின்னு அந்த proof - யை பார்த்தேன். இந்த மாதிரி யாராவது பேசிக்கிட்டு இருக்கும்போது upright ஆ stop பண்ணி instel பண்ணாதீங்க



7. கடைசியான point மக்கள் நம்மளை விட்டு போவதற்கு காரணம் வந்து நீங்க நிறைய பேரைப் பார்த்து இருப்பீங்க. எப்ப பார்த்தாலும் நான் அதை பண்ணுனேன் ,இதை பண்ணுனேன், என் பையன் அதை பண்ணுனான், என் குடும்பம் இதை பண்ணுச்சு, நான் இதை சாதிச்சேன், அதை சாதிச்சேன் என்று தன்னை தானே பெருமை பேசிகிட்டே இருப்பாங்க. ஆளை விடுடா சாமி அப்படின்னு சொல்லிட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி ஆளாக நாம இருக்கிறோமா. உங்களை நீங்கள் தாழ்த்தி பேசுங்க, ஒரு கூட்டம் உங்க கூட நின்னு சிரிக்கும், உங்க கூட friend ஆ இருப்பாங்க. உங்களை உயர்த்தி பேசுங்க ஒருபைய வரமாட்டான்.

என் school friends ,நான் வேலை செஞ்ச கம்பெனி, இங்கெல்லாம் எனக்கு மதிப்பு மரியாதை கொடுத்து, ஏதாவது நடந்ததை போட்டால், ஒருத்தர் கூட reply பண்ண மாட்டாங்க.ஏதாவது challanges, கேவலப்பட்டது, அந்த மாதிரி விஷயம் இருந்தால், அதற்கு எல்லாரும் பதில் சொல்லுவாங்க. ஒரு பாராட்டை வந்து பேசக்கூட மாட்டாங்க. பிடிக்காது யாருக்கும் தன்னை பற்றி பெருமை பேசுறதோ, நம்மளை யாராவது பாராட்டினாங்க,ஒரு இடத்தில் சாதிச்சிட்டாங்கனா, ஒருத்தனுக்கும் பிடிக்காது. எதுக்கு அவனுக்கு பிடிக்காதுனா. உடனே தன்னை compare பண்ணி பாப்பான். நமக்கு இது நடந்திருக்கா ஐயையோ நமக்கு நடக்கலையே அவனுக்கு நடந்திருக்கே அப்படின்னு பாப்பான் ‌.இது மனுஷனுடைய Nature. தன்னை பெருமை பேசினால் சோழிய முடிச்சிருவாங்க.

இந்த ஏழு விஷயங்களும் நீங்க பார்த்துட்டீங்கன்னா உறவு நல்லா இருக்கும் friendship நல்லா இருக்கும்.

இதிலா நீங்க எதெல்லாம் பண்ணி இருக்கீங்க , இதுல எது எல்லாம் தப்பு இருக்கு , எதை மாத்த போறீங்க அப்படின்னு கீழ comment பண்ணுங்க. மற்றவர்களுக்கு அந்த விஷயம் useful ஆ 

இருக்கும்.அவங்களும் அதை change பண்ண உதவியாக இருக்கும்.

நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்?

 நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி ஃப்யூச்சர் எப்படி இருக்கும்? 1. நெட்வொர்க் மார்க்கெட்டிங் பண்ணாலே சுத்தி சுத்தி எல்லார்கிட்டயும் இன்க்ளூட...